நோன்புக்கஞ்சி பாத்திரத்தில் ஊரும் பிள்ளையார் எறும்புகள்.
:சக.முத்துக்கண்ணன்
**************************
நோன்பு கஞ்சியை ஒரு கை பார்த்து விட்டுத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
வெள்ளிக்கிழமை தோறும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு போவதென முடிவு செய்திருக்கி்றோம். புதுசா கல்யாணம் முடித்ததிற்கான அடையாளங்களை இது மாதிரியானவை தான் இன்னும் தக்கவைத்திருக்கிறது. போன கோயிலுக்கே திரும்ப போக கூடாதென்பது கூடுதல் கொள்கை.
இந்தவாரம் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்திலுள்ள பிள்ளையார் கோவில்.
அந்த இடத்தில் கோவிலிருப்பதே என்னவளுக்கு தெரியாது.
பொதுவாக எல்லா கோவிலுக்குள்ளும் பிள்ளையார் இருப்பார். ஆனால் பிள்ளையாருக்கென்று தனிகோயில் கூடலூரில் இதுதான்.
முன்பெல்லாம் இந்த பிள்ளையார் கோயில் தான் அந்த பகுதிக்கு ஒரு அடையாளம். தற்போது அப்படியில்லை நிறைய கடைகள் சூழ்ந்து மறைத்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு உள்ளே நுழைகிறேன். நிறைய மாறியிருந்தது. குட்டி குட்டி தெய்வங்கள் புதிதாய் ஆங்காங்கே முளைத்திருந்தன. பிரிட்டிஷ்காரன் மாதிரி சாய்பாபாவெல்லாம் குடிவந்திருக்கிறார். பிள்ளையாரும் நவகிரகமும் மட்டும் அதே.
சின்ன வயதில் சித்திரை முதல் தேதி காலைல வெள்ளனா இங்க பொங்க வைக்க இடம் பிடிக்கவே பொம்பளெகளுக்குள்ள பெரிய மல்லுக்கட்டா இருக்கும்.
நாங்க அந்த கூட்டத்தை கொண்டாடிக் கொண்டிருப்போம்.
விசேச நாளில் கூடுகிற கூட்டம் அவ்வளவு சாதாரணமானதில்லை. நிறைய கற்றுக்கொடுக்கும். பலதரப்பட்ட மனித மனங்கள் சந்திக்கிற இடத்தில் சுவாரஸ்யங்கள் இயல்பாய் கூடி நிற்கும்.
நம்ம வீட்டுப் பொங்கல் பொங்குவதற்கு முன்பு அடுத்தவர்கள் தருகிற
ஓசிப்பொங்கலின் ருசி அலாதி.
அபிசேகத்திற்கு வரிசையில் ஊடடிப்பது, காணிக்கை கையூட்டு , சின்னச்சின்ன சண்டைகள், வாய்த்தாட்டியம் உள்ளவர்களின் சாதிப்புகள். உப்புச்சப்பில்லாத ஒன்றை ஊதிப்பெரிசாக்கும் பொம்பளையாள் நொணநாட்டியமெல்லாம் ஓரே வேடிக்கையாக யிருக்கும்.
நெரிசலுக்குள் ஓடியாடி விளையாடிவிட்டு சாந்தரம் போல் வீட்டுக்கு வந்து அலுப்போடு விழுவோம். சாமிக்கு பொங்க வச்சிட்டுவந்த சமாச்சாரத்தை அவரவர் பார்வையில் திரித்து திரித்து திறமைக்குதக்கபடி சொல்லிகொண்டிருப்பார்கள் வீட்டுப்பெண்கள். அடப்பாவிகளா. . . . இன்னுமா ஓடிக்கிருக்கு.. (அதைத்தான் இப்போது டீவிப் பொட்டிக்குள் வைத்து சீரியலாக ரசிக்கிறோம். பொரணியின் பரிணாமம்.)
மறுநாள் காலையில் நாதியற்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருக்கு நாங்க தான் தோஸ்த். அந்த நரைத்த தாடி வைத்த தாத்தா தான் எங்களின் சேட்டை பொறுக்காமல் விரட்டியடிப்பார். அவ்வப்போது கூப்பிட்டு பூசிவிட்ட விபூதி அவர் அன்புக்கு அடையாளம். இப்போது போகும் போது கூட அந்த தாத்தாவின் ஞாபகங்கள் நவகிரகத்தை நெருங்கும் போது நல்லெண்ணெய் பிசுக்கு வாடையில் எனை கரைத்தது.
இதே
நவகிரகத்தை சுற்றிசுற்றி எனை விரட்டியிருக்கிறார். அவரைப் படுத்தியிருக்கிறேன்.
வயதான காலத்தில் மனிதனுக்கு வெறுமை குடிகொள்கிற போது பாடுபடுத்தி தொந்தரவு செய்ய வாண்டுகள் வேண்டும். அது தான்னுடைய பேரன் பேத்தியாக வாய்க்கப்பட்டவர்கள் வரம் பெற்றவர்கள்.
இது பிள்ளையாருக்கும் தான். யாருமில்லா வேளையில் கருவூலத்திற்குள் நுழைந்து அவரின் சின்னத் தும்பிக்கையைத் தொட்டுபார்த்து விட்டு ஓடிவருவேன்.
எறும்பில் கூட எனக்கு பிள்ளையார் எறும்பு ரொம்ப பிடிக்கும். கறுப்பு நிறத்தில் தரைபூராம் புரு புருவென ஊரும். கடிக்காது. இது வீட்டுக்குள் வந்தால் பிள்ளையார் கோவிலில் போய் எள்ளு போட்டு வரச்சொல்லுவார்கள்.
கோயிலைச்சுற்றிப்போட்டுவிட்டு தும்பிக்கையிலும் சிறிது வைத்து விட்டு வருவேன்.
பொதுவாக யானையென்றால் எனக்கு ரொம்ப ப்ரியம். தெருவில் வீடுவீடாய் காசு கேட்டு வரும். உருவம் கண்டு பயந்தாலும் அதன்மீது பரிதாபப்பட்டுத்தான் நேசிக்க ஆரம்பித்தேன். சோறு போடுகிறான் என்பதற்காக அவன் சொல்பேச்செல்லாம் கேட்கிறதே என புரிந்து வைத்திருந்தேன்.
அது அசைந்து அசைந்து மணியோசையோடு நடந்து போகிறபோது அந்த ஆடும் வாலுக்குப்பின்னால் எப்படா சாணிபோடுமென கூட்டமாய் ஓடுவோம். யானச் சாணிய மிதிச்சா நல்லா படிப்பு வருமென நம்பிக்கை. என்னை தள்ளிவிட்டு முதல் ஆளாய் மிதித்தவன். அஞ்சாவதோட படிப்ப நிப்பாட்டி அதே பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி ஐஸ் விற்றுக்கொண்டிருந்தான் என்பது அந்த யானைக்கும் தெரியாது. அது போட்ட சாணிக்கும் தெரியாது.
காசு கொடுத்தால் தும்பிக்கையால் ஆசிர்வதிக்கும்.
அப்புறம் சொம்பு நிறைய தண்ணீர் கொடுத்தால் தும்பிக்கையால் உறிஞ்சி வீட்டுக்குள் புஸ்ஸ்ஸ். . . என ஸ்ப்ரே பண்ணும். வீடு விளங்கும் என்பது பாகன் பரப்பிய வதந்தி. நாங்களும் அது தூவுகிற மழையில் நனைவோம்.
ஒரே ஒரு முறை அப்பா எனை யானைமேல் ஏற்றியிருக்கிறார். பாகன் ஒற்றைக்கையில் எனைத்தூக்கி அதன் தலையில் உக்காரவைத்தார். நான் முன்புறமாக கவுந்து பற்றிக்கொண்டேன். அந்த முடியெல்லாம் சுருச்சுருவென குத்தியது. இடதும் வலதுமாக அசைந்து நாலு ஸ்டெப் முன்னும் பின்னுமாக நடந்து போனது.
அப்போதே பத்து ரூபாய் அதற்கு.
எங்கள் தெருவில்
யானை வலம் வந்த கதை மறுநாள் பள்ளிக்கூடம் பூராம் சொல்லி பில்டப் செய்து கொண்டிருப்போம்.
யானையின் கண்ணில் நீர் வடிவதைப் பார்த்து விட்டு அதை யானைக்காரன் ரொம்ப கஷ்டப்படுத்துவதாய் சொல்லி பிள்ளையாரிடமே கம்ளைண்ட் செய்திருக்கிறோம்.
வரைந்து பழகும் போது கூட யானையைத் தான் முதலில் வரைந்து பழகினேன்.
எனக்கு மிகவும் பிடித்துப்போன அந்த பணிவாக விலங்கின் தலையை மனித உடலோடு பொருத்திய அந்த அற்புத கற்பனையில் சிலாகித்து பிள்ளையார் எனும் சிற்பத்தை ரசித்தேன். விரும்பினேன். விரும்புகிறேன்.
இவ்வளவு பிடித்துப்போன பிள்ளையாரை ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு பிடிக்காது. அது அவர் பர்த் டே.
அந்த நாளில் உண்டாகும்
கூச்சலில் இருந்து அவரை காப்பாற்ற
மீண்டும் பால கங்காதரதிலகர் தான் சமாதியிலிருந்து எழுந்து வந்தாக வேண்டும்.
இதை மனையாளோடு பேசிக் கொண்டிருந்த போது தான் முக நூலில் கம்பத்தில் மதக் கலவரமென தோழர் பகிர்ந்திருந்தார். போலீஸ்க்கு மண்டை உடைப்பு எனவும் தொடர்ந்து செய்தி வந்தது.
கலவரத்துக்கான விதைகளை மதவாதிகள் எப்போதும் கையில் வைத்துக்கொண்டே அழைகிறார்கள். யார் பக்கம் நியாயம் என்பதைவிட கலவரத்தை நீர்த்து போக வைப்பதே முதல் தேவை. அதுவும் காவலர்கள் உதவியால் நடந்தேறியதாய் தகவல்.
இந்திய அரசியல் சூழலில் தமிழகத்தில் ஒரு மதக்கலவரம் நடந்தேறினால் வெற்றி தோல்விகளை விட களமாடும் வாய்ப்பை யாருக்கு தருகிறோம் என்பதில் கவனமிழப்பது தான் தென்னக மண்ணின் வரலாற்று கேவலம்.
மதவாதிகள் என நான் குறிப்பிடுவது இந்துத்துவா சக்திகளை மட்டுமல்ல.
அதற்கு சரிநிகராய் மேடை அமைக்க முயலும் சில இஸ்லாமிய அமைப்புகளையும் தான்.
முன்னோர்களின் வரலாற்றில் உள்ள சிந்தனை மரபை விட்டுவிட்டு வீரமரபை மட்டுமே வீட்டிலும் தெருவிலும் சினிமாவிலும் ( பாகுபலி) வகுப்பிலும் உணர்ச்சிப் பொங்க சொல்லி சொல்லி ஆளாளுக்கு முறுக்கிக் கொண்டு திரிகிறான். அந்த வீரம் என்கிற கிறுக்குத் தனத்தை நிரூபிக்க முயலுகிற போது தான் கலவரம் உருப்பெருகிறது. இங்கு உணர்ச்சிகளைத் தணித்து உண்மையை உணர்த்துபவர்கள் தான் இப்போதைக்கு
கடவுள்கள்.
கொஞ்சம் பொருத்துக் கொள்வதிலும். விட்டுக்கொடுப்பதிலும் தான் மனிதம் காக்கப்பட்டுவந்திருக்கிறது.
இதையெல்லாம் கூட மனைவியோடு பேசிக்கொண்டு வரமுடிகிறது என்பதே வெள்ளிக்கிழமைகளின் நான் நிகழ்த்துகிற சாதனை.
வீட்டுக்கு வந்ததும் இன்னொரு மாணவன் கொடுத்து விட்டுப்போன நோன்புக்கஞ்சியை சூடேற்றிக் கொடுத்தாள்.
சற்று நுகர்ந்தேன்.
"இன்ஷா அல்லா ! உன்னை தொழுவதால் தன் மீது இஸ்லாமியச் சாயம் பூசிக்கொண்ட மனிதர்களையும் உனது பங்காளிகளுக்கு மாலை யிட்டு பூஜிப்பதால் தன் மீது இந்துச்சாயம் பூசிக்கொண்டு திரியும் மனிதர்களையும் ரமலான் திருநாளில் பெருமழை பெய்ய வைத்து மதச்சாயம் வெளுக்கச்செய்."
பட்டைகிராம்பு வாசத்தில் கஞ்சி அருமையாக இருந்தது.
அடுத்தவாட்டி கிழமைய மாத்தலாமா என்றாள்.
" அப்டின்னா "
"வெள்ளிக்கிழமைக்கு பதிலா ஞாயிற்றுக்கிழமை."
"எங்க ? "
"சர்ச்சுக்கு"
" ம்ம்ம் போலாம். . "
ஆமேன்.!!
-சக.முத்துக்கண்ணன். 3/6/17
************************
உடன்பட்டால் பகிருங்கள். Share it,

Comments
Post a Comment