பெரியார் தொடங்கிவைத்த உல்லியக்குடி பள்ளியில் முகாம் :
**************************************
வகுப்பறை சூழலை விடுத்து வெளி யிடத்தில் - ஒரு முகாமில் நம் மாணவர்களை சந்திக்கும் தருணம் புதுவிதமானது.

ஆசிரியன் என்கிற அடையாளத்தை கழற்றி வைத்துவிட்டு அவர்களோடு உரையாடும் போது நிறைய பரிமாற முடிகிறது.

அவனை நெருங்குதலும்,  கண்டடைலும் சுலபமாகிறது. அவன் தன்னை வெளிப்படுத்துகிறான்.

சின்ன சின்ன மாற்றங்கள் துளிர்விடுகின்றன.

பகலெல்லாம் கோவிலை சூழ்ந்திருந்த முள்செடிகளையெல்லாம் அகற்றிச்சுத்தம் செய்துவிட்டு ஓய்ந்திருந்த மாணவர்களை மாலை வேளையில் சந்தித்தேன்.

முதலில் கொஞ்சம் உரையாடல். . . பொதுக்காரியங்களில்  இளைஞர்கள் ஈடுபாடு குறித்து,  பிற்பாடு ஜப்பான் நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேசினோம். அப்புறம் ஒரிகாமி எனும் காகித மடிப்புக்கலை பயின்றோம். முதல் தொப்பி திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அணிவித்து செல்பி எடுத்துக்கொண்டோம். ஜாலியான கற்றலுக்கு பின் மாணவர்களோடு இரவு  உணவு .
தூய்மைசெய்த அதே கோவிலில் வழங்கப்பட்டது. அருமையான சமையல். உல்லியக்குடி மக்களுக்கு நன்றிகள் பல. 🙏🙏🙏

நிறைவுடன்
சக.முத்துக்கண்ணன்.


Comments

Popular Posts